செரியாமையினால் பேதி, வயிற்றிரைச்சல், விலாக்குத்து, நெஞ்சுவலி, நாவறட்சி, உடம்பெரிச்சல், இருமல், தாகம் முதலிய குணங்களை உண்டாக்கும் ஓர் நோய் - A form of diarrhoea from indigestion due to the phlegmatic condition of the system. It is marked by rumbling noise in the bowels, darting pain in the sides and in the intercostals region, chest pain, parched tongue, burning sensation of the body, cough, thirst etc.
அசீரணத்தினால் குழந்தைகளுக்குப் பேதியும் அதில் சீதமும் ஏற்பட்டு அத்துடன் சுரமும் காயும் ஓர் கபநோய் - Diarrhoea from indigestion in children due to phlegmatic causes. It is followed by fever and watery stools containing thin, white mucous – Watery or serous diarrhoea.