சீரண வுறுப்புகளின் தொழில் வேறுபாடு அடைந்து, உண்ட உணவு செரியாமல், வயிற்றில் புளிப்பு அதிகமாக ஏற்பட்டு, அதனால் அட்சரம் பொங்கல், வாயு பரிதல், ஏப்பம், புளித்தேப்பம், நெஞ்செரிச்சல், எதிர்க் களித்தல், மலபந்தம் முதலிய குணங்களும், சில சமயம் மயக்கம், அரோசிகம், முதலியவைகளுங் காணும் நோய். இது சாதாரணமாய் உணவின் குற்றத்தினாலும், மித மிஞ்சிப் புசிப்பதாலும், இராசபோசனத்தினாலும் ஏற்படும் - Indigestion in one or other of its numerous forms, occurring as a result of disorders of the digestive organs, due to the fermentation of the food taken. It is marked by sore in the mouth, flatulence, belching, eructation of gas smelling like rotten eggs, heartburn, slight eructation after meals, constipation etc, and accompanied at times, by giddiness and nausea. This is generally caused by errors in diet, as when some irritating, over rich or high material is taken - Dyspepsia.