திரிதோஷங்களினால் குதத்தின் அடி வளையத்தில் முளை ஏற்பட்டுப் பெருத்து ஆழ்ந்த வேருள்ளதான புறமூலமும், ஆசன வாயிலில் வெடிப்பும் விரணமுங்கண்டு ஆண் பிள்ளைகளுக்கு மூத்திரப் பையிலும் பெண் பிள்ளைகளுக்குக் கருப்பப் பையிலும் அழற்சியை யுண்டாக்கி, அத்துடன் குளிர்சுரம், நரம்புச் சோர்வு, சோகை முதலிய குணங்களையும் காட்டும் உள் மூலமும், மூலக்கிரகணியை யுண்டாக்கும் மூல முளையுமாகிய நோய்கள். இவைகளை எளிதில் குணப்படுத்த முடியாத காரணத்தினால் சத்திரச் சிகிச்சையாலொழிய வேறு வகையில் பூரணமாக சௌக்கியப்படுத்த முடியாதெனக் கொள்ளப்படும். அன்றியும் மூல நோயால் வருந்துபவர்களுக்குக் கை, கால், நாபி, ஆசனம், விதை, முகம் ஆகிய விடங்களில் வீக்கம் ஏற்படுமாகில், மரணத்தை யுண்டுபண்ணுமே ஒழிய வேறு வழி கிடையாது எனவும் கருதப்படும் - Incurable Piles or Haemorrhoids of the following types.
i. External piles, deep-seated and enlarged, arising on the external sphincter ani as a result of the derangement of the three humours in the system.
ii. Internal piles associated with fissure and ulcer of the anus causing reflex irritability of the bladder in men and the womb in women and various other diseases such as, ague, nervousness, anaemia etc.
iii. Piles both internal and external giving rise to dysenteric symptoms.
They are held to be incurable unless surgical operation is promptly resorted to. In order to effect a permanent and complete cure. Moreover piles accompanied by swelling in any of parts of the body such as, the limbs, the navel region, anus, scrotum and face, invariably result in death.