அசாத்திய சோகை.
உடம்பு முழுவதும் இரத்தங் குறைந்து பரவிய வீக்கம் நெடு நாளாகியும் வாடாமற் போனகாலத்தும், வயிறு, குதம், அல்குல் ஆண்குறி ஆகிய இவ்விடங்களில் வீக்கங்கண்டு அத்துடன் சுரம், மேல் மூச்சு, பேதி முதலிய துர்க்குணங்கள் கண்டபோதும், எலும்பிற்குள்ளிருக்கும் மச்சதாதுவை நோயானது தாக்கினபொழுதும், இரத்த தாதுக்கள் ஈனமடைந்தகாலத்தும் ஏற்பட்ட தீராத இரத்தக்கேடு - Anemia which is reckoned as incurable and at times proves fatal.
i. In the long-continued swelling of the body which in no way abates or is reduced.
ii. When inflammation of swelling of the stomach anus or the genitals in accompanied by fever, hard-breathing, purging etc.
iii. When the disease is followed by degeneration of the bone-narrow and failure of blood formation due to the incapacity of blood making organs.
NOTE:- In Allopathic systems, acute anemia and pernicious anemia were until recently considered incurable and fatal.