அசம் + கல்லிகா = ஆட்டு + அதிர் - ஆட்டின் கழுத்தில் தொங்கும் அதிர். அதைப் போல் படருவதால் இப்பெயர். வாதத்தினால் உடம்பில் மணிக்கோர்வையைப் போல நீளமாக மினுமினுப்புடன் நோவில்லாத கொப்புளங்களை எழுப்பி இரணத்தை உண்டாக்கும் ஓர் நோய். இது குழந்தைகளுக்கு முக்கியமாய்க் காணும் நோய். - (Literally) it means goat’s cheek. It is an inflammatory skin disease marked by pimples or eruptions of a deep red colour, arranged in the form of a rosary. These pimples are glossy, knotty and painless and they are of the same colour as the surrounding skin and their origin is usually ascribed to the action of deranged Kapam and Vayu. It is peculiar to infants.**