உடம்பு பருத்துத் தடித்து எங்கும் கருணைக் கிழங்கு முளைகளைப் போல் கொப்புளங்களையும், விரணங்களையும் உண்டாக்கும் எட்டுவகை அம்மைகளில் ஒன்று. இதனால் கீல், முகம் இவ்விடங்களில் வீக்கங்கண்டு நாவறட்சி, தாகம், பிசுபிசுப்பான நீர்க்கசிவு முதலிய குணங்களுண்டாகும் - One of the eight kinds of small-pox in which pustules develop to the size of a yam-root shoots and spread all over the body. It is followed by swelling in joints and the face, parched tongue, thirst, viscous perspiration etc.**
கண்மணியில் சிகப்பாகச் சதை வளர்ந்து பிதுங்கி, விரணமாகிச் சீழ் வடியும் ஓர் கண்ணோய் - A disease of the pupil of the eye in which small reddish tumours are found protruding through the transparent cornea and discharging pus.**