உடம்பில் விஷமேறி இரத்தம் முறித்து அதனால் வாதபித்தம் அதிகரித்து, வயிறுளைதல், வாந்தி, கோழை, மூர்ச்சை, வாய் நீரொழுக்கு, வீக்கம், புரட்டல், உடம்பு மெலிதல், இருமல், பக்க நோய் முதலியவைகளை உண்டாக்கும் உடம்பினோர் நிலைமை, இது அசாத்தியம் - A condition of the body in which the quality of the blood is altered by the reason of the presence of a poison collected in the system. It is marked by the following symptoms – increase of humours in the system, with rumbling noise in the stomach, vomiting, salivation, swelling, restlessness, emaciation, cough, pain on the sides and so on. It usually terminates in death – A kind of Toxemia (Blood Poisoning).
NOTE:- சாதாரணமாக, விடபாகம் என்றால், உடம்பில் இரத்தம் முறிந்து விஷத்தன்மை கொள்ளல். இது அடியில் கண்ட காரணங்களினால் உண்டாகும். அவையாவன மீன் முள், நெல்லின் வால், காடி, புணர்ச்சி, புழு, சமைத்தழிந்த பண்டம், செம்பினூறல் சேர்ந்த கறி அன்னம் புசித்தல் முதலியன. இது எண் வகைத்து, அவையவன – வாதம், பித்தம், சிலேட்டுமம், திரிதோஷம், எரிவு, காந்தல், சன்னி, அக்கினி, a common term denoting any ailment or condition induced by the absorption of septic products, arising from the introduction into the blood putrefactive germs or decomposing organic matters such as, bones of fish, alchohol, diseased meat, food saturated with vedigris etc Blood poisoning. According to Indian Medical science, it consists of eight kinds as enumerated above.**