ஒரு வித சரும நோய் - Erysipelas.**
2. a. சுரம், பேதி, தாகம், மூர்ச்சை, வாந்தி, பிரமை, நித்திரைக் கேடு, உடம்பில் சில விடங்களில் நெருப்புக் கொப்புளங்களைப் போன்ற கொப்புள எரிச்சல் கண்டு அவ்விடங் கறுத்தல், மற்றவிடங்களில் நீலம் அல்லது இரத்த நிறமுண்டாதல் முதலியவைகளை உண்டாக்கும் ஓர் விதச் சரும நோய். இது படருந் தன்மையது - An acute specific, febrile disease with inflammation of the skin. It is accompanied by an eruption of a flery acrid humour in some part of the body, and a peculiar blue colour in other parts, The symptoms are – purging, thirst, swooning, vomiting and the characteristic rash with a well defined margin upon the skin. It is of a spreading nature – St. Anthony’s fire - Erysipelas.**