சாதாரணமாய் கண் சிவந்து பிறகு மாறி விடும்; மலர விழிக்க வொட்டாது, கண்ணீர் ஒழுகி, இமை தடித்துக் கடைக் கண்ணில் அறுப்பது போல வலியையும் கூச்சத்தையுமுண்டாக்கிப் பீளை தள்ளும் ஓர் கண்ணோய். (அகத்தியர் நயன விதி) - An inflammation of the superficial tissues of the eye, especially of the conjunctive, which will soon disappear. It is marked by an acute pain on the cornea of the eye, a catarrhal or muco – purulent secretion and swelling of the eyelids – Conjuctivitis.