சுரங் கண்டு, வாய் வெந்து நாற்றத்துடன் வாய் நீரொழுகி, நாக்கிலும் உதட்டிலுங் கொப்புளம் பொங்கித் துன்புறுத்தும் ஓர் நோய். இது சாதாரணமாய்க் குழந்தைகளுக்கு உண்டாகி முலை உண்ண முடியாமல் துன்புறுத்தும் - A grave from of catarrhal stomatitis characterised by the formation of small ulcers on the lips and the tongue with copious salivation fetid breath and slight fever. It is common especially in children and causes much pain to them while suckling – Ulcerative Stomatitis.**
கண்ணிமையில் சிறு கொப்புளங்களை எழுப்பி வலியை உண்டாக்கிக் கண்ணீர் வடியச் செய்து பீளை தள்ளும் ஓர் வகைக் கண்ணோய் -An ulcerative inflammation of the eyelids attended with mucopurulent secretion - Blepharitis.**