Search Keyword in TAMIL WORD category
- a. பொதுவாக ஒலியை நோக்குங்கள் இது சர்வாந்தர்யாமிய ஆகிய கடவுள் போன்றது.“ஒசை யொலி யெலா மானாய் நீயே” என்பதினால் இது விளங்கும். இது எல்லாவித ஒலிக்கு மூலமாயுள்ளது. ஒப்பற்றது. சிருஷ்டிக்கு காரணமாய் உள்ளது. “ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம் அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி சோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித் தொல் உலகில் எழுவகையாந் தோற்றமாகி” என்னும் சுப்பிரமணிய. ஞானத்தில் இருந்து அறியலாம்
இது அ+உ+ம என்னும் மூன்று பிரிவுகளான ஒசையையுடைய ‘ஓம்’ என்னும் பிரவணத்தின் முதல் உறுப்பு ஒலி “ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஒகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு” என்னும் சட்டைமுனி சூத்திரத்தைக் காண்க.
மேலும் ‘அ’ என்பது சிவத்தையும் (உ) என்பது சக்தியையும் (ம) என்பது சிவசக்திய மூலத்தையுங் குறிக்கும். ஆகவே இது மந்திர ஒலிக்கு முதன்மையான காரணமாயுள்ளது.
b. Referring to sounds in general it is the cosmic sound signifying the Omnipotent God in all His aspects.
(*As it will be found peculiar to the Tamil Medical Science in dealing not only with mere medicines and diseases, but also with their philosophical and psychological aspects with reference to the human body and mind side by side, it in considered essential to explain these terms furnishing useful reference to those who make it a special study.
The said peculiarities in this science can only be ascribed to the reasons mentioned below.
It is said that diseases and their cure, rest on 4 pillars viz, Philosophy, Astronomy, Alchemy - (Chemistry) and virtue of the physician and as much, the Tamil medical science expects that every physician ought to possess a clear and true perception of (1) the cause and effect in relation to diseases (2) the influence of stars and season, upon the organisms of man (3) the properties o of drugs and their action in the human system and [4] the faith and spiritual power in him.
This in fully dealt with in that portion of the science (பண்டிதர் இலக்கணம் ) which treats of the qualities of physicians.)
This is made clear in the example given above, “ஓசையோலி etc”. It is the root of all possible sounds, is the least differentiated, and as such, forms the basis of creation. This is well expressed in the above verses from the work named Subramanyar Gnanam.
Moreover, it is the primary sound in the pronunciation of "Om, which is the combination of the three sounds A+U+M, A - representing Siva, U - Sakthi and M - Siva sakthi, as explained in Sattamuni Sutram and thus it forms the basic sound in the Mantric Science.
a. எழுத்தைக் குறிக்குங்கால் –
இது முதலெழுத்து இது தமிழ் போலவே தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் (வட மொழி) முதலிய பாஷைகளிலும் இது முதல் எழுத்தாய் விளங்கும்.
இது பற்றியே திருவள்ளுவரும் அவரது குறளின் துவக்கத்தில்,
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
என்றார்.
“எழுத்தகரம் போல் வான் இறை”
என்பதினாலும் அறியலாம்.இது எல்லா எழுத்துக்களுள் எல்லாமாயிருந்து விளங்குவது.
'அவ்வாகி உள்வாகி மவ்வுமாகி ஐம்பத்தோர், எழுத்துக்கு ஆதியாகி'
என்பதினாலும். அகர முதல் அவ்வெழுத்தும் ஆதியாகும் அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் (அகஸ்தியர் மெய்ஞான சூத்திரம்) என்பதினாலும் அறியலாம்.
இது மூன்றெழுத்தாகிய அ, உ, ம என்பதிலொன்று. இது ம், ங், வ் முதலிய எழுத்துகளோடு சேருங்கால் மந்திர சக்தியைப் பெறுவதாகக் கருதப்படும் (உ.ம்) அம், அங், அவ்.
b. When referring to Alphabets - it is the first letter of the Tamil Alphabet, as it is in the alphabets of all the other languages, such as Telugu, Canarese, Malayalam, Sanskrit etc. The most familiar Example explaining this will be found in the sacred Kural of Tiruvalluvar in the very first verse of it, "அகர முதல்….யுலகு ” which means that A is the first of all the letters as God is the first of all in this world. “A as its first of letters every speech maintains.
The "Primal Deity' is First through all the world's domains." (Pope'sTranslation)
Again, it forms the common symbol of all the letters and as such represents them all. This is well explained in the poetical work called "Agastiyar Maignanam"
It is one of the three letters A+U+M pronounced in combination as 'Om’ and it is supposed to derive its occult power by its union with the other letters, ங், ம், வ்.
a. உடம்பைக் குறிக்குங்கால் -
இதுவாயைத் திறந்தவுடன் நாக்கு அல்லது மேல்வாயைத் தீண்டாமலே தொண்டையின் மூலமாய்ப் பிறக்கும் ஓசை, பேசும்போது உண்டாகும் எல்லா ஒலியையும் விட இது மிகவும் இயற்கையானது. இது கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்கும். இதுபற்றியே யூகி முனி தன் வைத்திய சிந்தாமணி 800-ல்
“அவ்வென்னும் அட்சரத்தில் நாடி தோன்றும், அந்நாடிதனில் நின்று தத்துவந்தான் தோன்றும், எவ்வென்னும் எலும்பு, தசையின் புடையும் நரம்பும், ஈரெட்டு பழுவோடு இரண்டு கொங்கையுமாம், முவ்வென்னு முட்டுக்கால் வளையீரெட்டாம் மூட்டியமைத் தங்கனே உருவமாக்கி...”
எனக் கூறியதையும்,
“கண்டது அவ்வென்னுங் கடையதோர் அட்சரம் பிண்டத்துக்கு உற்பத்தி பிறக்கும் இதிலே”
என்று மச்சைமுனி தீட்ச ஞானத்திற சொல்லி இருப்பதையுங் காண். மேலும், அகஸ்தியர் முதுமொழி ஞானத்தில்,
“உந்தியின் உள்ளே அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதி தன்னை”
என்று கூறியவாறு கடவுள் இவ்வெழுத்தன் உருவமாய் உடும்பினுள் அமைந்தவாறு தெளிய விளங்கும். இதை மந்திர ரூபமாய் ஜெயிப்பதனால் இது உடம்பில் ஓர் கிளர்ச்சியை உண்டாக்கி, நோய், விஷம், கிரகதோஷ முதலிய குற்றங்களைப் போக்கும் எனவும் கருதப்படும்.
b. When applying to the body. It is the throat sound pronounced by the mere opening of the mouth without the help of any part of the tongue or palate and it is the most natural sound that the human voice can utter.
It forms the Active Principle of gestation in the mother's womb thereby giving rise to the development of tissues, muscles, nerves, bones etc., up to the full growth of a foetus and this is very well defined in the Medical works of the Siddhars Yugimuni and Machamuni.
It is said in Agastyar Gnanam that the God in one aspect exists in the navel region of the human microcosm as a combination of the three letters, அ, உ, and ம.
Again this letter, by its repetition in unison with terminations, acts in the human system setting up vibrations and thereby effects the cure of diseases and other evils arising from poisons or astral influences due to planetary motion.
a. மருந்தைக் குறிக்குங்கால் -
சுக்கு, மிளகு, திப்பிலி, (திரிகடுகு) என்ற அர்த்தங் கொண்டு, எல்லா மருந்துச் சரக்குகளிற்கும் இது முதன்மையானது என்று, காட்டுவதற்கு ஓர் அறிகுறியாய் நிற்கிறதெனக் கொள்ளினும் பொருந்தும்.
b. Thus referring to drugs. It signifies dry ginger, pepper, and long pepper, as to show that they are the primary drugs in Indian medicines.
a. அ - முற்கூறிய அல்லது 'அந்த' என்பதைக் காட்டும் சுட்டெழுத்து.
b. An indicative prefix used to denote அந்த which means what was previously mentioned or described as in அப்பூண்டு, அவ்வியாதி the plant or disease already said or described.
a. அ - வடமொழியில் இன்மை, குறைவு, எதிர்மறை, மிகுதி ஆகியவைகளைக் காட்டும் ஓர் உபசர்க்கம்.
b. Sanskrit, it is the Alpha privative of varying origin, denoting absence, negation or want of the thing or quality expressed by the principal.
The following examples.
(i) Denoting, இன்மை, absence or negation – அசுத்தம் - which means சுத்தமின்மை uncleanliness or lack of cleanliness.
(ii) Denoting குறைவு want of the thing. அசீரணம் - சீரணக்குறைவு, want of digestion.
(iii)Denoting எதிர்மறை contrary sense, அசீதம் - உஷ்ணம், heat as against cold. அசீவம் - மரணம் death as against life.
(iv) மிகுதியைக் காட்டும். It has a slightly intensive meaning. அமிதம் அளவிற்கு மேலானது, in excess of due proportion. அகோரக் காய்ச்சல் - மிகவும் கோரமான காய்ச்சல், a very high fever - Hyper-pyrexia.
NOTE:- Even in the English language, the Greek letter Alpha, - called Alpha privative, equivalent to the prefix, un or in, - is used in medical terms to denote the want, absence, or negation of the thing or quality expressed by the principal.
e.g.,.
Adynamia
Want of vital or muscular power
Amazia
Absence of the breast
Apneumatic
Not inflatable
Aphagia
Inability to swallow
Anemia
Bloodlessness.